தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மது விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள்

by Admin / 24-03-2026 05:13:32pm
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மது விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள்

சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மது விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .ஒரு தனி நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஆகும் முழுப்பாட்டில்கள் மது அல்லது 12 பீர் பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த மது இருப்பை விட 50 சதவீதத்திற்கு மேல் இருப்பு வைத்திருக்கக் கூடாது என்றும் அதேபோல் தினசரி விற்பனை சராசரி அளவைவிட 30 சதவீதத்திற்கு அதிகம் இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் வழங்கும் டோக்கன்கள் அல்லது டோக்கன்களை பயன்படுத்தி மது விற்பனை செய்யக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மது விற்பனையை நிகழ நேரத்தில் கண்காணிக்க கணினி மயமாக்கப்பட்ட அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் விற்பனை நடந்தால் உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். டாஸ்மாக் கால்கள் மற்றும் கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படக்கூடாது ,மீறினால் உருவம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo