ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து நடத்தும் ரயில்வே பார்சல் சேவை

by Staff / 23-12-2022 03:12:45pm
ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து நடத்தும் ரயில்வே பார்சல் சேவை

இந்திய ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து நடத்தும் ரயில்வே பார்சல் சேவை இந்தியாவின் வடக்கு பகுதியில் நடைபெற்று வருகிறது. இது  சம்பந்தமாக கடந்த வாரம் மதுரையில் ரயில்வே வாரிய இயக்குனர் சத்யக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரயில்வே பார்சல்களை ‌ உற்பத்தியாகும் இடத்திலிருந்து வாடிக்கையாளரின் வாசலுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்திற்காக இந்திய தபால் துறை முயற்சி எடுத்து சென்னைக்கு செல்ல சரக்குகளை சேகரித்து வைத்தது. பசுமலையில் உற்பத்தியாகும் 250 கிலோ ஆயுர்வேத மருந்துகள் மற்றும் 300 கிலோ ஏலக்காய் ஆகியவை முதன்முறையாக மதுரையிலிருந்து சென்னைக்கு தேஜாஸ் ரயில் மூலம் அனுப்பப்பட்டது. இதன் துவக்க விழா மதுரை ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (23.12.22) அன்று நடைபெற்றது.  இந்த விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிபிரியா, போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜெய்சங்கர், தபால் துறை இயக்குனர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo