தேர்தலில் போட்டியிட தயார் -சீமான் பேட்டி

by Staff / 24-09-2023 05:27:05pm
தேர்தலில் போட்டியிட தயார் -சீமான் பேட்டி

கோவை விமான நிலையம், சிட்ரா சிக்னல் அருகே இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடி மரத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்,சேரன், சோழர், பாண்டியர் போல் தலைவர் பிரபாகரன் வீரம் மிக்கவர் அதனால் கொடியில் புலியை பயன்படுத்துவதாக சீமான் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலுக்கு ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதாகவும் நான்கு மாதங்களுக்கு முன் மக்களவைத் தேர்தலுக்கு பயணத்தை தொடங்கி விட்டதாக கூறினார்.நான் ஒரு தமிழ் தேசிய மகன் எனவும் தமிழ் நிலத்துக்காக தான் தேர்தலில் நிற்பேன் நாடாளுமன்ற தேர்தலுக்கு என் தம்பி தங்கைகளை தோல் மீது ஏற்றி அவர்களை வழி அனுப்பினேன் என்று கூறினார். தமிழகத்தில் நரேந்திர மோடி, ராகுல் காந்தி போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து போட்டியிடுவதாகவும் அவர்களை எதிர்க்கும் வகையில் போட்டியிடத் தயார் என்று சீமான் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories