சிறுவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

by Staff / 24-09-2023 05:12:00pm
சிறுவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முஸ்லீம் காலனியில் உள்ள பால் விகாஸ் பள்ளியில் 10 வயது சிறுவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கியுள்ளார். சக மாணவனை பென்சிலால் அடித்ததற்காக ஆசிரியர் மாணவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்துள்ளார். இரண்டு மாணவர்களை சிறுவனின் கால்களையும் கைகளையும் பிடிக்குமாறு சொன்ன ஆசிரியர், சிறுவனின் பின்பக்கத்தில் குச்சியால் பலமாக அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via
Logo