பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி

by Editor / 29-06-2022 04:20:34pm
பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் சம்பரான், ஆராரியா, போஜ்பூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதில் 16 பேர் இறந்து விட்டனர். இதில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்து உள்ளார். மேலும் மோசமான வானிலை காலங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories