3 குழந்தைகளை கொலை செய்த கொடூர தாய் தற்கொலை

by Editor / 19-06-2025 03:37:30pm
3 குழந்தைகளை கொலை செய்த கொடூர தாய் தற்கொலை

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் - சித்தம்மா (33) தம்பதி, ராகவேந்திரா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி, அவரது ஆடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோவித்துக்கொண்டு குழந்தைகளுடன் வெளியேறிய சித்தம்மா, அக்பினா (8), அவனி (6), ஆர்யா (4) ஆகிய மூன்று பிள்ளைகளை குட்டையில் வீசி கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via