நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த படம்

by Admin / 19-04-2022 10:27:39pm
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த படம்

 

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த படம் கிட்டதட்ட  வேறு இயக்குனருக்குச்செல்லும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..நெல்சன் தன் இயக்கத்தில்  வந்த கோலமாவு கோகிலா படத்தை பார்த்தவர்கள்.யார் இந்த நெல்சன் தீலீப் குமார் என்று  திரும்பி பார்க்க வைத்தவர்.இரண்டாம் படம்  டாக்டர .சிவகார்த்திகேயன்,அனிருத்துடன் இணைந்து எடுத்திருந்தார். படம் , நல்ல வரவேற்பை பெற்று நூறு கோடிக்கு மேல் வசூலை வாரிக்கொடுக்க,சன் பிச்சர்ஸ் சிவகார்த்திகேயனிடமிருந்து வாங்கி வெளியிட்ட கையோடு ,நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை பிரமாண்டமாய் எடுத்து,ஒவ்வொரு பாடல்களையும் படத்தின் புரமோசனாக செய்தது.படத்தின் வெளியீட்டுக்கு முன் விஜய்யுடன் நெல்சன் பேட்டி எடுக்கும்  நிகழ்வு 10.4.2022 இல் ஒளிபரப்பாகி  ,படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கி.,..திரையரங்கில்   முன்னோட்ட காட்சி, ,அதிகாலை காட்சி என பீஸ்ட் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக்கொண்டு சென்றது .படம்  வெளியான முதல் நாளில் வசூல் தூள் கிளப்ப..  அடுத்தடுத்த  காட்சிகளில் படம் குறித்து வெளியான   எதிர்மறை கருத்துக்கள்.சப்தமிடாமல் மறுநாள்  வந்த  கே.ஜி.எப் வசூலில் சாதனை படைத்து பீஸ்டை பின்னுக்கு தள்ளியது.இந்நிலையில் தான்.நெல்சன் இயக்கத்தில் நடிக்கயிருந்த ரஜினிக்கு பீஸ்ட் படத்தை    தனிக்காட்சியாக போட்டுக்காட்டப்பட்டது. படம் முடியும் வரை மெளனமாக இருந்திருக்கிறார்ரஜினி ..பின்பு படம் பற்றி கருத்துகேட்டவரிடம் எதுவும்சொல்லாமல்சென்றதாக தகவல்.இந்நிலையில்,நெல்சன் இது  வதந்தி. படம் ஜீலையில் ஆரம்பித்து 2023இல் வெளிவருகிறது என்று தொிவித்தநிலையில் அவரது ட்விட்டரில் பதிவிட்டிருந்த தலைவா்169 பதிவுஅப்படியே உள்ளது  பட பட்டியலில் நான்காவதுபடமாக. ஆனால் ,ரஜினியுடன் இருந்தபுகைப்படங்களெதுவும் இல்லை..

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த படம்
 

Tags :

Share via