ரயில்வே பாதுகாப்பை விமர்சித்த கனிமொழி எம்.பி

by Staff / 30-10-2023 11:35:47am
ரயில்வே பாதுகாப்பை விமர்சித்த கனிமொழி எம்.பி

ஒடிசா சம்பவத்தை தொடர்ந்து ஆந்திர ரெயில் விபத்து ரெயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்று கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஆந்திராவில் விஜயநகரம் அருகே நேற்று இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவைத் தொடர்ந்து ஆந்திராவில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து ரயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories