லியோ திரைப்படம் ரூ.500 கோடி வசூலை கடந்தது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்ப்டத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரூ.500 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. அதில், இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.300 கோடி வசூலை தாண்டியுள்ளது. மேலும், இதற்கு முன்பு அதிகபட்சமாக விஜயின் பிகில்-ரூ.321 கோடி, மெர்சல்-ரூ.267 கோடி, சர்கார்-ரூ.258 கோடி வசூல் செய்துள்ளது.
Tags :