வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட கசகசா பறிமுதல்

தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மலேசியா நாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு கடல்வழியாக வந்த கண்டெய்னர் ஒன்றில் தவிடு இறக்குமதி என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்த கண்டெய்னர் பெட்டி சேதமடைந்து அதில் இருந்து கசகசா கொட்டி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தவிடு இறக்குமதி என்ற வந்த கண்டெய்னர் பெட்டிகள் அனைத்தையும் சோதனை செய்போது அதில் சில கண்டெய்னர் பெட்டிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கசகசா இருந்தது தெரியவந்தது.உடனடியாக அந்த கண்டெய்னர் பெட்டிகளை பறிமுதல் செய்து தூத்துக்குடிக்கு இறக்குமதி செய்தது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். கசகசா-வை இறக்குமதி செய்ய தடை இல்லை ஆனால் அதற்கு கூடுதல் வரி செலுத்த வேண்டும் ஆகையால் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் தவிடு என்ற பெயரில் கசகசா-வை கண்டெய்னர் பெட்டியில் பதுக்கி கொண்டு வந்திருக்கலாம் என்று மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
Tags :