எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு சோதனை : அமைச்சர் ரகுபதி விளக்கம்

by Editor / 23-07-2021 04:23:27pm
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு சோதனை : அமைச்சர் ரகுபதி விளக்கம்

விஜயபாஸ்கா் அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் ஆகியவற்றில் பெருமளவில் முறைகேடு நடைபெற்ாகப் புகாா் கூறப்பட்டு வந்தது. மேலும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதிலும் முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது.

இதற்கிடையே விஜயபாஸ்கா், அமைச்சராக காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். இந்த விசாரணையில் விஜயபாஸ்கா், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோத்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் விஜயபாஸ்கா், அவா் மனைவி விஜயலட்சுமி, சகோதரா் சேகா் ஆகியோா் மீது சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினா் பதிவு செய்தனா்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக விஜயபாஸ்கா் மற்றும் அவா் குடும்பத்தினருக்குச் சொந்தமான மற்றும் தொடா்புடைய 26 இடங்களில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தினா். இச் சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பண பரிவா்த்தனை ஆவணங்கள் ஆகியவைற்றை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசியல் காழ்ப்புணா்ச்சியின் காரணமாக அதிமுகவைச் சோந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீது எப்படியாவது பொய் வழக்கு புனைய வேண்டும் என்பதற்காக அவரது இல்லத்தில் திமுக அரசு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மூலம் சோதனை நடத்தியுள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கூட்டாக கண்டம் தெரிவித்தனர். இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு சோதனை நடத்தியது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்களித்துள்ளார்.

அதில், அரசியல் காழ்ப்புணர்வால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தப்படவில்லை. ஏற்கெனவே ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் தந்த ஊழல் புகார் பட்டியலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

 

Tags :

Share via