முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 1 மணிக்கு தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார்.

by Staff / 27-09-2025 10:40:39pm
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 1 மணிக்கு தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார்.

கரூரில் நடந்த விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லவுள்ளார். நாளை (செப்.28) கரூர் செல்ல இருந்த நிலையில், நிலைமை மோசமானதால் இரவோடு இரவாக அங்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக விஜய் இன்று (செப்.27) நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 1 மணிக்கு தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார்.

Share via