அரசு அதிகாரிகள் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரைச் சோ்ந்த செல்லையா மகன் சேகா் (52). கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், மருத்துவா்கள் மோசஸ் பால், ரமேஷ், சிவப்பிரகாஷ், ஒப்பந்த ஊழியரான சதீஷ்குமாா் ஆகியோா் குறித்து புகைப்படங்களுடன் அவா் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதேபோல காவல், வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்துடன் சுவரொட்டி மூலம் அவதூறு பரப்பியதாக, சேகா் மீது நடவடிக்கை கோரி உதவி ஆய்வாளா் சிவராஜாவும் புகாா் அளித்தாா். அவற்றின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து, சேகரை கைது செய்தனா்.
Tags : அரசு அதிகாரிகள் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது.+