தேர்தல் முடிவுக்கு பின்மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர வாய்ப்பு.

by Editor / 29-05-2024 10:22:55pm
 தேர்தல் முடிவுக்கு பின்மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர வாய்ப்பு.

 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 'பிரி பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ்' கட்டணங்களை, அடுத்த மாதத்தில் உயர்த்த உள்ளன.நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவை வழங்கி வருகின்றன. வோடபோன் நிறுவனம் விரைவில், 5ஜி சேவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் டெலிகாம் நிறுவனங்கள், 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை, 10 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி உள்கட்டமைப்புக்காக, டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளன. அதை ஈடுகட்டும் வகையில், விரைவில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags : தேர்தல் முடிவுக்கு பின்மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர வாய்ப்பு.

Share via