என்ஜின் பழுது காரணமாக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் தாமதம் பயணிகள் கடும் அவதி

சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக கேரளா செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் லத்தேரி ரயில் நிறுத்தத்தில் என்ஜின் பழுது காரணமாக நின்றுள்ளது. மாலை 7.40 மணிக்கு நின்ற நிலையில் பழுது சரி செய்ய முடியாமல் தவித்து உள்ளனர். இந்த நிலையில் மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு அதனை பொருத்தி அங்கிருந்து 8.40 மணியளவில் புறப்பட்டு சென்றது. இதனால் ஒரு மணி நேரம் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Tags :