நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.70 ஆக நிர்ணயம். வரலாறு காணாத அளவு உயர்வு.

by Editor / 23-12-2023 08:10:23pm
நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.70 ஆக நிர்ணயம். வரலாறு காணாத அளவு உயர்வு.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாட்டின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் நாமக்கல்லில் முட்டையின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.  அந்த வகையில்  முட்டை கொள்முதல் விலை நேற்று (டிச.22) ரூ.5.65 இருந்த நிலையில் 5 காசுகள் உயர்ந்து ரூ.5.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.70 ஆக நிர்ணயம். வரலாறு காணாத அளவு உயர்வு.

Share via