ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமார் மீனா தலைமையில் போலீஸ்காரர்கள் சவுந்தரராஜன், பெரியசாமி, கமலநாதன், போதைப்பொருள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.இந்த ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த கைப்பையை கைப்பற்றி சோதனையிட்டனர். அந்த பையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அதனை கடத்தி வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும், பையை போட்டுவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த 2 கிலோ கஞ்சாவை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :