ஃபெங்கல் புயல் அச்சம் நீங்குவது எப்போது..?
வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை புதுச்சேரி – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இந்த புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் ஃபென்ஜல் புயலானது புதுச்சேரியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது. ஃபென்ஜால் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாகவும், ஃபெஞ்சல் புயலின் முன் பகுதி கரையை தொட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்று வீசி வருகிறது. இன்று இரவு 10மணிக்குள் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஃபெங்கல் புயல் அச்சம் நீங்குவது எப்போது..?
Tags : ஃபெங்கல் புயல் அச்சம் நீங்குவது எப்போது..?