ராமர் கோவிலில் கொடியேற்ற விழா தொடர்பான பாகிஸ்தானின் விமர்சனத்தை இந்தியா கடுமையாக எதிர்த்தது.
அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்ற விழா தொடர்பான பாகிஸ்தானின் விமர்சனத்தை இந்தியா கடுமையாக எதிர்த்தது. வெறித்தனத்தின் கறை படிந்த பதிவை கொண்ட ஒரு நாட்டிற்கு அதன் உள் விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கு உபதேசம் செய்ய எந்த தார்மீக தகுதியும் இல்லை என்று கூறியது.
சீனா அருணாச்சலப் பிரதேசத்தைச் சார்ந்த ஒரு பெண் சாங்காய் விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது. சீனாவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதில் உதவாது என்று கூறியது. இந்தியாவின் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் தலைமை போட்டி தீவிரமடைந்துள்ளது. துணை முதல்வர் டி கே சிவகுமாரின் ஆதரவாளர்கள் முதல்வர் பதவிக்கு பகிரங்கமாக அவரை ஆதரித்து வருகின்ற நேரத்தில் கட்சி தலைமை விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாஅரசியல் அமைப்பு தினத்தை ,(ஜம் விதான் கிவாஷ்) கொண்டாடியது. வலுவான ஜனநாயகத்திற்கு அரசியலமைப்பு கடமைகள் அடித்தளம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும் இந்திய தலைமை நீதிபதி சீரான தேசிய நீதித்துறை கொள்கைக்கு அழைப்பு விடுத்தார்.
சீனாவில் இருந்து வாங்குவதை குறைக்கும் முகமாக இந்தியாவில் நிரந்தர காந்த உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 750 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத் மற்றும் மகராஷ்டிராவிற்கான இரண்டு ரயில்வே மல்டி ட்ராக்கிங் திட்டங்களுக்கும்ப புனே மெட்ரோ கட்டம் இரண்டு திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
டெல்லி என் சி ஆர் பகுதியில் காற்றின் தளத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் நிலை எண் மூன்று கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் ரத்து செய்துள்ளது.
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் 17 வது ஆண்டு நிறைவை இந்தியா கொண்டாடியது. தலைவர்கள் பயங்கரவாதத்திற்கும் எதிராகவும் சகிப்புத்தன்மைக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்.
இந்தியா தென் அமெரிக்கா டெஸ்ட் தொடரில் 2-0 என்கிற கணக்கில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
2030ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நகரமாக அகமதாபாத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Tags :


















