கிளீன் சிட்டி சென்னை... அமைச்சர்..பணியை தொடங்கி வைத்தார்

by Editor / 22-08-2021 05:39:19pm
கிளீன் சிட்டி சென்னை... அமைச்சர்..பணியை தொடங்கி வைத்தார்

சென்னை தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை வியாசர்பாடியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சென்னை மாநகரை தூய்மைபடுத்தும் விதமாக தீவிர தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து சென்னையை அழகுபடுத்தும் விதமாக மாநாகராட்சி சார்பில் வரையப்பட்டு வரும் ஓவியங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து குடிசை பகுதி மக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.

பின்னர் சென்னை மாநகராட்சியின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மரம் நடும் திட்டத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார். நிகழ்வில் சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories