தரையில் வந்து தற்கொலை செய்யும் திமிங்கிலங்கள். ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி.
மேற்கு அவுஸ்திரேலியாவின் “அல்பனி” பிரதேசத்திலிருந்து தென்கிழக்கே 60km தொலைவிலுள்ள சைன்ஸ் கடற்கரையில் நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் ஒன்றையொன்று நெருக்கமாக நீந்தி வந்து கரையிலிருந்து 150மீற்றர் தொலைவில் நேற்று பகல் தரித்து நின்றன..
மாலை மங்கத்தொடங்க ஒவ்வொன்றும் வரிசையாக மணல் பகுதியை நோக்கி நகர்ந்து தங்கள் வால்களை தரையில் அடித்து தம்மை மாய்க்க ஆரம்பித்தன.மீட்பாளர்கள் தரையிலிருந்து ஆழமான கடல் பகுதிக்கு தள்ளிச்செல்ல முற்படுகின்ற போதிலும் அவை திரும்பி மணலை நோக்கியே நீந்துகின்றன..இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்டவை இறந்து விட்டன.. மீதமுள்ளவைகளும் இறப்பதற்கே கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றன..
ஆராய்ச்சியாளர்கள், கடல்வாழ் உயிரின ஆர்வலர்களாலும் சுறாக்களின் இந்த விசித்திரமான நடத்தைக்கு காரணம் தெரியாமல் தடுமாறுகின்றனர்.சுறாக்கள் ஏற்கனவே உலகின் சில இடங்களில் இறந்து கரையை அடைந்த போதிலும் தற்போது நடைபெறும் இந்த நிகழ்வு மிகவும் வியப்புக்குரியதாக பேசப்படுகின்றது..
Tags :