கால்நடை உரிமையாளர் மீது கூடுதல் அபராதம் விதிக்க நகர் மன்ற கூட்டத்தில் திமுக- பாஜக வலியுறுத்தல்

by Admin / 01-08-2023 09:40:49am
கால்நடை உரிமையாளர் மீது கூடுதல் அபராதம் விதிக்க நகர் மன்ற கூட்டத்தில் திமுக- பாஜக  வலியுறுத்தல்

கோவில்பட்டி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள்  - கால்நடை உரிமையாளர் மீது கூடுதல் அபராதம் விதிக்க நகர் மன்ற கூட்டத்தில் திமுக பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தல்...

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் மன்ற அவசர கூட்டத்துக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். நகராட்சி செயற்பொறியாளர் சணல் குமார், நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

கூட்டம் தொடங்கியவுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

 

சீனிவாசன் பேசுகையில், கோவில்பட்டி நகராட்சி பகுதிக்கு, சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் வருவதற்கு முன்பு கோவில்பட்டி அருகே உள்ள தோப்பாளம் பகுதியில் இருந்து தான் குடிநீர் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்தப் பகுதி பாதுகாக்கப்படுகிறதா? அதனை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். 

 

உறுப்பினர் சரோஜா, 17-வது வார்டுக்கு உட்பட்ட முத்தானந்தபுரம் தெருவில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். 

 

விஜயகுமார், தெற்கு பஜார் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். எட்டயபுரம் சாலையில் இரண்டாவது குடிநீர் திட்ட பணிகள் எந்த அளவு நடைபெற்று உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து  இடையூறாக கால்நடைகள் சுற்றி தருவதாகவும் அதனை தடுக்கும் வண்ணம் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும் என  வலியுறுத்தினார் இதே போல்  திமுக நகர்மன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை விடுத்ததால் நகர் மன்ற தலைவர் சுகாதார ஆய்வாளர்களுக்கு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்

 

 

சுரேஷ், சண்முகவேல், முத்துராஜ் ஆகியோர் பேசுகையில், வார்டு பகுதிகளில் தினமும் காலை வேளையில் வந்து வீடுகளில் குப்பைகளை சேகரிக்க வேண்டும். சேகரிக்கப்படும் குப்பைகளை ரயில்வே இருப்பு பாதைகள் அருகே கொட்டுவதால் அத்துரையைச் சேர்ந்த அதிகாரிகள் வார்டு உறுப்பினர்களுக்கு அபராதம் விதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே ரயில்வே இருப்புப் பாதை பகுதியில் குப்பையில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாறுகால்களில் முறையாக அடைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஏஞ்சலா, கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகள் கிராம ஊராட்சி கணக்கில் அமைந்துள்ளது. இதனை நகராட்சி கணக்கில் மாற்றிக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பத்திரப்பதிவு செய்வதற்கு எளிதாக இருக்கும். 

 

பதில் அளித்து பேசிய நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பாரம்பரியமிக்க தோப்பாளம் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். முத்தானந்தபுரம் தெருவில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெற்கு பஜார் பகுதியில் சுவாமி ரதவீதி உலா வரும் இடமாக உள்ளதால் அங்கு வேகத்தடைகள் அமைக்க வாய்ப்பு இல்லை. எட்டையாபுரம் சாலையில் இரண்டாவது குடிநீர் திட்ட குழாய்கள் பதித்து இணைப்பு கொடுக்கும் பணியை துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் இருபுறமும் அணுகு சாலை அமைப்பதற்கு இடம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் நிறைவடைந்தவுடன் சாலை அமைக்கும் பணி நடைபெறும். 

 

ரயில்வே இருப்பு பாதை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம கணக்கில் உள்ள நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை நகராட்சி கணக்கில் கொண்டு வருவதற்கு அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

 

 

Tags :

Share via