அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 19-11-2022 05:24:13pm
அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளராகவும் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்துஅவரது குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது திண்டுக்கல் சீனிவாசன் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

 

Tags :

Share via