இன்று ஸ்பெயின் நாட்டில் பயணம் முடித்து முதலமைச்சர் சென்னை வருகை

ஸ்பெயின் நாட்டில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி சென்றிருந்த முதலமைச்சர் தம் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை வந்தாா். .விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், 3,340 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும்ஸ்பெயின் நாட்டின் எலிவன் நிறுவனம் ரூபாய் 540 கோடியை முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும் பாஜக எதிர்க்கட்சி போலவும் காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும் மோடி குறை கூறி வருவதாகவும் நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நன்றி, வணக்கம்,என்று பதிலளித்தாா்....

Tags :