ராமனுக்கும் சீதைக்கும் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது
ராமனுக்கும் சீதைக்கும் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது.ஜனகர்களின் மிதிலாபுரியே விழாக்கோலம் பூண்டது.ராமன்-சீதை மண வைபவம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.ராமன் திருமணத்தைத்தொடர்ந்து இலக்குவன்ஊர்மிளையைகரம் பிடித்தான்.பரதன் மாண்டவியை,சத்ருகன் சருத நிதியை மணம் முடித்தனர்.ஆன்றோரும் சான்றோரும் நிறைந்தஅவை தம்பதிகளை நெஞ்சார வாழ்த்தியது. விஸ்வாமித்ர மாமுனி தம் பணி முடிந்ததால்,தசரதரிடம் அவர் தம் ஒப்படைத்த மகிழ்வில் இமயம் நோக்கி தவம் செய்ய புறப்பட்டார்
.
திருமணம் முடிந்து சில நாட்களில் தசரதர் தம் புதல்வர்கள்-மருமகள்கள் சகிதம் அயோத்திக்கு புறப்பட்டார்.மிதிலாபுரியிலிருந்து அயோத்திக்கு செல்கையில் ,ஒரு விபத்து நிகழ்ந்தது.காற்று சுடுமையாசு வீசியது.பூமி நடுநடுங்கியது.பரசுராமன் தீடிரென்று எதிரே தோன்றினார்.அவருடைய தந்தை ஜமதக்னி எனும் முனி.அவர் சத்திரிய மன்னனால் கொல்லப்பட்டார்.அதனால் அவருடைய மகன் பயங்கர மூர்த்தியாகிய பரசுராமன் சத்திரிய குலத்தையே
அழித்து ஒழிக்க சபதம் எடுத்திருந்தான்.அவன் கோபம் கொண்டு நின்றான்.அவன்கண்கள் வசிஷ்டரையோ ..தசரதனையோ நோக்க வில்லை.ராமனே ,அவன் இலக்காக இருந்தது
.ராமனை நோக்கி வந்த பரசுராமன் ,ராமனைப்பார்த்து,பழமையான சிவ வில்லை.ஒடித்து விட்டாய்.அதன் பொருட்டு நீ மாவீரனா ஆகிவிட முடியாது .என்கையில் உள்ள திருமாலின் வில்லை வளைத்து ஒடித்துக்காட்டு என்றான் கோபம் கொப்பளிக்க..இராமனுக்கு என்ன நிகழப்போகிறதோ?தசரதர் தவித்தார்.பரசுராமன் கோபத்தை தணிப்பது யாராலும் இயலாதே என்றுமறுவினார்.ராமனே..எந்தவித அச்சமின்றி வில்லை வாங்கி வளைத்து ..அம்பை பூட்டி ,எதன் மீது இந்த அம்பை எய்ய வேண்டுமென்றுகேட்க,சற்றும் எதிர்பாராத பரசுராமன் ..ராமனிடம் சரணடைந்து ..என் வலிமையையும் தவவரத்தை எடுத்துக்கொள்க என்றான்..
Tags :