நேபாள நாட்டை சேர்ந்தவர்களை கூடங்குளம் அணுமின் நிலைய பணிக்கு  அழைத்து வந்ததால் பரபரப்பு.

by Editor / 05-07-2024 09:44:45am
நேபாள நாட்டை சேர்ந்தவர்களை கூடங்குளம் அணுமின் நிலைய பணிக்கு  அழைத்து வந்ததால் பரபரப்பு.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகிறது இங்கு ஒன்று மற்றும் இரண்டு அணு உலைகள் மூலம் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது 3 மற்றும் நான்காவது அணு உலைகளில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் 5 மற்றும் 6 ஆகிய அணு உலைகளில் 35 சதவீதம் பணிகள் நடைபெற்று வருகின்றது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை தனியார் ஒப்பந்த நிறுவனமான L&T நிறுவனம் அணு உலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்காக  2 பேருந்துகளில் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 200 பேரை பணிக்கு அழைத்து வந்தள்ளது தகவல் அறிந்து உள்ளூரைச் சேர்ந்த "கூடங்குளம் காண்ட்ராக்ட் அசோசியேஷன்" மற்றும் அதன் நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் செந்தில் முருகன்,கூடன்குளம் மேற்கு பகுதி கவுன்சிலர் நடராஜன்,மற்றும்  தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளூர் இளைஞர்கள் நேபாள பணியாளர்களை அழைத்து வந்த பேருந்துகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்  சம்பவம் அறிந்து தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் கூடங்குளம் காவல் உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் போலீசார் நேரில் வந்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்  
உள்ளூரிலே ஏராளமான படித்த இளைஞர்கள் வேலையின்றி உள்ள நிலையில் அணு உலையில் பணிக்கு பணியாளர்களை அமர்த்தாமல் அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்தவர்களை குறைந்த கூலிக்கு அழைத்து வருவதில் என்ன நியாயம் என அவர்கள் அப்போது கேள்வி எழுப்பினர்? மேலும் ஏற்கனவே அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு ஏராளமானவர்கள்பணி புரியும் நிலையில் தற்போது அண்டை நாடான நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களை குறைந்த ஊதியத்திற்கு  அழைத்து வந்தது ஏன் எனவும் அவர்களை வெளியேற்றும் வரை பணிக்கு யாரையும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வள்ளியூர் DSP யோகேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி என்னும் 3 மாத காலங்களுக்குள்  நேபாள நாட்டு தொழிலாளர்கள் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதாக கூறியதால்  பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது.

 

Tags : நேபாள நாட்டை சேர்ந்தவர்களை கூடங்குளம் அணுமின் நிலைய பணிக்கு  அழைத்து வந்ததால் பரபரப்பு.

Share via