பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

by Editor / 05-07-2024 09:41:30am
பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சத்யா என்ற சீர்காழி சத்யா (41). இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில் சிறையில் உள்ளார், அலெக்சிஸ் சுதாகர்.அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.மாமல்லபுரம் அருகே சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவிடம் இருந்து தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Share via