தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை-வானிலை ஆய்வு மையம்

by Editor / 05-07-2024 09:22:52am
தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று  இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை (ஜுலை 6) முதல் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

Tags : வானிலை ஆய்வு மையம்

Share via