தமிழக அரசுப் பேருந்து விபத்து.. 14 பேர் காயம்

கடலூர்: விருதாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 14 பேர் காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாலத்தின் சுவர் உடைந்து பேருந்து பள்ளத்தில் பாயாமல் நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Tags :