கொலை வழக்கில் தி.மு.க .முன்னாள் எம்எல்ஏ விடுதலை

by Staff / 26-02-2024 01:28:51pm
கொலை வழக்கில் தி.மு.க .முன்னாள் எம்எல்ஏ விடுதலை

கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதனை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொளத்தூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வில்லிவாக்கம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதனின் துாண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாக புவனேஸ்வரனின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி கே.ரவி இன்று தீர்ப்பளித்துள்ளார். அரசுத் தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via