முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த ஜான் பாண்டியன்

by Editor / 01-08-2021 07:10:30pm
முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த ஜான் பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் மகன் வியங்கோ பாண்டியனுக்கும் சென்னையை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மகள் ஷாலினிக்கும் இம்மாதம் 27-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி-நெல்லை சாலையில் அமைந்துள்ள தேவேந்திரர் பிசியோதெரபி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இத்திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் அங்கு முகாமிட்டு கவனித்து வருகின்றனர்.

இதனிடையே தனது மகன் திருமண விழா என்பதால், கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் ஜான்பாண்டியன். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை அன்று வீட்டிற்கு வருமாறு ஸ்டாலின் தரப்பில் இருந்து ஜான்பாண்டியனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo