பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கிரான் ஏ .ஐ. இன் ஃபேக்ட் சப்மிட் 17ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இந்தியாவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கிரான் ஏ ஐ இன் ஃபேக்ட் சப்மிட் டெல்லியில் 17ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதன் பொருட்டு அவர் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வர உள்ளார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறாா்., அப்பொழுது ,இந்திய விமானப்படைக்காக 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் மெகா ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3. 25 லட்சம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகும். 114 விமானங்களில் 18 விமானங்கள் நேரடியாக பிரான்ஸில் இருந்து வாங்கப்படும் . மற்ற 96 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் இந்த 114 ரஃபேல் விமானங்களுக்கான ஒப்புதலை பிப்ரவரி 12ஆம் தேதி வழங்கியது. இந்திய விமானப் படைக்கு 36 ரஃபேல் விமானங்களும் கடற்படைக்காக 26 ரஃபேல் விமானங்களும் இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது.
Tags :



















