எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன் ஆதரிப்போம்: முதல்வர்

எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம். அவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக எய்ட்ஸ் தினம் இன்று (டிச. 1) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் ‘சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எச்ஐவி, எய்ட்ஸ் தொற்றை குறைக்கும் செயலைமுன்னெடுப்போம்’ என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எச்ஐவி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து, கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க, அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், புதிய எச்ஐவி தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 13. 78 லட்சம் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை சேவைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் கர்ப்பிணிகளிடம் கடந்த 2003-ல் 0. 83 சதவீதமாக இருந்த எச்ஐவி தாக்கம் தற்போது 0. 17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம். அவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்
Tags :