எண்ணூர் துறைமுகத்தில் சீன கப்பலில் மாலுமி மர்ம மரணம்

by Staff / 25-04-2024 01:56:03pm
எண்ணூர் துறைமுகத்தில் சீன கப்பலில் மாலுமி மர்ம மரணம்

எண்ணூர் துறைமுகத்தில் சீன கப்பலில் மாலுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். சீன நாட்டை சேர்ந்த ‘கியோ யுஹான் -12’ என்ற சரக்கு கப்பல், கடந்த ஏப். 6ஆம் தேதி நிலக்கரி ஏற்றிக்கொண்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு புறப்பட்டது. அதில், சீனாவைச் சேர்ந்த, கோங் யூவூ (57) என்ற மாலுமி கப்பல் நிர்வாக பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்த கப்பல் கடந்த 20ஆம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை வந்தடைந்தது.இந்நிலையில் கடந்த ஏப். 22ஆம் தேதி இரவு காணாமல் போனதாக கூறப்பட்ட கோங் யூவூ இறந்து கிடப்பதை சக மாலுமிகள் கண்டனர். பின், கப்பலின் கேப்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, துறைமுக அதிகாரிகளின் தகவலின்படி, மீஞ்சூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சடலத்தை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு அனுப்பினர்.

 

Tags :

Share via

More stories