காதல் விவகாரம் - மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய பெண்

by Staff / 25-04-2024 02:02:22pm
காதல் விவகாரம் - மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய பெண்

உத்தரப் பிரதேச மாநிலம் பால்லியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பிந்த் (26). இவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று மணமகன் ஊர்வலம் நடந்துள்ளது. அப்போது, அங்கு வந்த 24 வயது இளம்பெண், ராகேஷ் மீது ஆசிட் வீசியுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி சாலையில் இழுத்துச் சென்றனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தன்னை காதலித்து வந்த ராகேஷ், தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via