முதல்வருக்கு துருப்பிடித்த இரும்புக்கை.. அண்ணாமலை காட்டம்

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? என விமர்சித்துள்ளார்.
Tags :