இந்தியா-நியூசிலாந்து இடையே சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம்.
இந்தியா-நியூசிலாந்து இடையே சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைகள் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துள்ளன. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தம் என்று பிரதமர் மோடியும் நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்சனும் இணைந்து அறிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கும் .மேலும் இந்திய ஏற்றுமதிகளுக்கு நியூசிலாந்தின் 100 சதவீத சந்தை வழங்கும் ..அதே நேரத்தில் இந்தியா 99 சதவீத நியூசிலாந்து பொருள்களுக்கு சுங்க வரிகளை குறைக்கும் என்றும் மார்ச் 2025 இல் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் 9 மாதங்களில் நிறைவடைந்துள்ளன. இது இரு நாடுகளின் அரசியல் விருப்பத்தை காட்டுகிறது என்றும் இந்தியா ஏற்றுமதிகளுக்கு நியூசிலாந்தில் 100 சதவீத சுங்கவரி இல்லாத பொருள் கிடைக்கும் என்றும் மேலும் இந்தியா தனது விவசாயத் துறையை பாதுகாக்க பால் பொருட்கள் போன்ற முக்கிய பொருட்களை தவிர்க்கிறது. இந்த ஒப்பந்தம் பொருள்கள் சேவைகள் ,முதலீடு ,சுங்கத்தணிப்பு மற்றும் தொழில்நுட்ப தடைகள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதோடு இந்தியாவிற்கு 1.4 பில்லியன் நுகர்வோர் சந்தையை திறக்கும் என்றும் மேலும் விவசாயம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கல்வி மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் இது உலகளாவிய சந்தைகளை நம்பி இருப்பதை குறைக்கும் என்றும் இந்தியாவின் பரந்த வர்த்தக பல்வகை படுத்துவதற்கு இது உதவும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :



















