தமிழக வெற்றிக்கழக  மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு டோல்கேட்டில் கட்டணம் இல்லை

by Editor / 27-10-2024 09:32:28am
 தமிழக வெற்றிக்கழக  மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு டோல்கேட்டில் கட்டணம் இல்லை

தமிழக வெற்றி கழக முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு 66 கேலரி அமைக்கப்பட்டு அதில் 55,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 25 எல்இடி மற்றும்  வெளி பகுதிகளில்  40 எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளன.*வாகனங்கள் நிறுத்துவதற்கு    சுமார் 200 ஏக்கரில்  வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வசதிகளுடன்  18 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.மாநாட்டு முகப்பில்  101 அடி கொடி கம்பத்தில்  விஜய் கொடி ஏற்ற உள்ளார்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில்   மாநாடு நடைபெறுவதனால்  சுமார் 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமயபுரம் டோல்கேட் முதல் விக்கிரவாண்டி டோல்கேட் வரை இன்று தமிழக வெற்றிக்கழக  நிர்வாகிகளுக்கும் கட்சி கொடி கட்டப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் காவல் துறையினர் முன்னிலையில் நம்பர் பதிவு செய்து இலவசமாக அனுப்பப்படுகிறது. அதற்கான அனுமதி ஏற்கெனவே பெறப்பட்டுள்ளதாம்

 

Tags :  தமிழக வெற்றிக்கழக  மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு டோல்கேட்டில் கட்டணம் இல்லை

Share via