பள்ளி சிறுமியை நண்பனுடன் சேர்ந்து பலாத்காரம்

by Staff / 21-03-2022 10:31:56am
பள்ளி சிறுமியை நண்பனுடன் சேர்ந்து பலாத்காரம்

 
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தேனூரை சேர்ந்த பள்ளி சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலம் திருநள்ளாறு அடுத்த நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவை சேர்ந்த நந்தா எனும் நந்தகுமார் பழகி வந்துள்ளான். 

இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு தனது நண்பன் ராம்குமார் மூலம் சிறுமியை அழைத்து வர செய்து அதே பகுதியில் ஆள் அரவமற்ற இடத்திற்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி நந்தகுமார் பலாத்காரம் செய்துள்ளான்.

மேலும் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளான். எனினும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் திருநள்ளாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த நந்தகுமார் மற்றும் அவனது கூட்டாளி ராம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த திருநள்ளாறு போலீசார் சிறுமியை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நந்தகுமார் மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்த திருநள்ளாறு போலீசார் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.


 

 

Tags :

Share via

More stories

Logo