6 ஆண்டுகளில் 44 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 2018 முதல் 2023 வரை 44.10 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனால் 121 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோய் 150 நாடுகளில் பரவி 59,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்கிறது. இந்நிலையில் 2030க்குள் இந்தியாவில் நாய் கடியால் உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் ரேபிஸ் நோய் தடுப்பு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :