கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் - அண்ணாமலை

by Staff / 04-09-2023 02:30:25pm
கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் - அண்ணாமலை

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “பல்லடத்தில் பாஜக நிர்வாகி குடும்பத்தோடு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என்பதில் உறுதி. காவல்துறையில் சட்டம் ஒழுங்கையும், குற்றப்பிரிவையும் பிரிக்க வேண்டும். காவல்துறையின் செயல்பாடுகளில் அரசியல் விமர்சனங்களை வைக்க விரும்பவில்லை. தென் தமிழகத்தில் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories