கர்நாடகா அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

by Staff / 15-07-2024 01:53:07pm
கர்நாடகா அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

கர்நாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என அம்மாநில அரசு கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகா அரசு மீறுகிறது. காவிரி நீரைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து முடிவு எடுத்திட நாளை (ஜூலை 16) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்” என்றார்.

 

Tags :

Share via