முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

by Editor / 02-11-2022 08:57:07pm
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார். இந்நிலையில் விழாவிற்கு செல்வதற்கு முன் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது பேசிய மம்தா, ஸ்டாலின் என் சகோதரர் போன்றவர், மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்தேன். தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo