அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தருமபுரி காரியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலுதவி சிகிக்சைக்கு பிறகு தற்போது ஓய்வெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காரில் சென்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
Tags :