"ஏன் சமைக்கவில்லை?" நண்பனை அடித்து கொலை செய்த நபர்கள்

பீகாரில் சமைத்து வைக்காத நண்பனை அடித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த பினய் சிங், சோனு திவாரி, சந்தீப், ஹன்ஸ்ராம் ஆகியோர் குத்புல்லாபூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி, கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சந்தீப்பும், சோனுவும் மது அருந்திவிட்டு அறைக்கு வந்துள்ளனர். அங்கு ஹன்ஸ்ராமிடம் ஏன் சமைக்கவில்லை? என்று கேட்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags :