இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ரிக்டர் அளவுகோளில் 6.2-ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படக்கூடிய "ரிங் ஆஃப் ஃபயர்" என அழைக்கப்படும் பகுதியில், இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால், அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனாலும், கடந்த 2004ஆம் ஆண்டு சுமத்ராவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால், தமிழ்நாடு உட்பட சில நாடுகளிலும் சுனாமி ஏற்பட்டு கடும் சேதத்தை விளைவித்தது.
இந்நிலையில், தற்போது வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2ஆக பதிவாகியுள்ளது. இதனால், சுனாமி குறித்தான அச்சம் எழுந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டதும், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் அங்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் தற்போதுவரை வெளியாகவில்லை.
Tags : இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்