வழக்கறிஞர் கொலைக்கு இதுதான் காரணம்.. வெளியான தகவல்

கோவையில் நேற்று (ஆக.02) வழக்கறிஞர் உதயகுமார் என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் கடத்திச் சென்று வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் வழக்கறிஞர் உதயகுமார் கொல்லப்பட்டதாக தக்வல் வெளியாகியுள்ளது. தனியார் பைனான்ஸில் இருந்து 30 லட்சம் பெற்றுவிட்டு திரும்பத் தராததால் கடத்திச் சென்ற போது ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது.
Tags :