அதிமுக நிர்வாகி கண்ணன், முறைகேடாக ஒதுக்கிய ரூ. 3.5 கோடி டெண்டர் ரத்து

by Staff / 03-08-2024 04:57:46pm
அதிமுக நிர்வாகி கண்ணன், முறைகேடாக ஒதுக்கிய ரூ. 3.5 கோடி டெண்டர் ரத்து

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவரும், அதிமுக நிர்வாகியுமான கண்ணன், முறைகேடாக ஒதுக்கிய ரூ.‌ 3.5 கோடி டெண்டரை ரத்து செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 3.5 கோடி வளர்ச்சிப் பணிகளுக்காக, ஊராட்சி ஒன்றிய மன்றக் கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக டெண்டரை ஒதுக்கியதாக கண்ணன் மீது புகார் எழுந்தது. இதற்கு உடந்தையாக செயல்பட்ட புகாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories