தமிழகத்தில் அமலுக்கு வந்தது ஒரு நாள் முழு ஊரடங்கு.

by Writer / 09-01-2022 09:03:46am
தமிழகத்தில் அமலுக்கு வந்தது ஒரு நாள் முழு ஊரடங்கு.

தமிழகத்தில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு.

தமிழகத்தல் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

டாஸ்மாக்' மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை இன்றைய ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது.

நள்ளிரவு 12 மணியோடு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

மெட்ரோ ரெயில் சேவை இயங்காத போதிலும் மின்சார ரெயில்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. 

ஓட்டல்களில் பார்சல் சேவைக்கும், உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்லலாம் என்றும், ஆனால் போலீசாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

திருமணம் போன்ற நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களைக் காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். 

மாநகரில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 

ஊரடங்கில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், உற்பத்தி தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டை காண்பித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அமலுக்கு வந்தது ஒரு நாள் முழு ஊரடங்கு.
 

Tags :

Share via