சென்னையில் நாளை நகைக்கடைகள் மூடல்

by Editor / 22-08-2021 05:28:36pm
சென்னையில் நாளை நகைக்கடைகள் மூடல்

மத்திய அரசின் ஒரு அங்கமான இந்திய தர நிர்ணய அமைப்பு தன்னிச்சையாக எடுத்த புதிய ஹால்மார்க் (HUID) விதிக்கு எதிராக சென்னையில் நாளை தமிழகம் முழுவதும் நகைக் கடைகள் மூடப்படும் என சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது‌. தேசிய போராட்டத்திற்கு ஆதரவாக இரண்டரை மணி நேரம் கடை அடைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை தனியார் விடுதியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது பேசிய அவர்கள், தற்போது விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு தங்க நகையிலும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள என் (HUID ) கட்டாயம் என்ற இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை நகை வணிகர்கள் சார்பில் நாளை இரண்டரை மணி நேரம் கடையடைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த தனி அடையாள எண் (HUID) பெற நகை வாங்குவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பவதாலும், தனிநபர் ரகசியம் காக்க இயலாத சூழல் உருவாவதுடன் அச்சுறுத்தலாகும் மாறுகிறது என தெரிவித்தனர். புதிய அடையாள எண் பெறாத நகையை விற்பனை செய்தால் வணிகரின் பதிவு ரத்து செய்வதில் தொடங்கி, தண்டனை, தேடுதல் மற்றும் பறிமுதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் இந்தத் திட்டம் மீண்டும் அதிகாரிகளின் ஆளுமைக்கு வித்திடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

காலை 9 மணி முதல் முற்பகல் 11.30மணி வரை சென்னையில் கடையடைப்பு செய்யப்படும் என்றும் 1000-க்கும் அதிகமான, சில்லறை தங்க நகை விற்பனைக் கடைகள் இதில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர். புதிய ஹால்மார்க்கிங் தர முத்திரை வழங்கும் வசதி கொண்டுள்ள இந்தியாவின் 256 மாவட்டங்களிலும் இனி தங்க நகை விற்பனையின்போது இந்தத் தர முத்திரை கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கண்ட தர முத்திரை வழங்கும் மையங்களில் போதுமான வசதியும் சாதனங்களும் இல்லாத காரணத்தால், ஏற்கனவே 16 முதல் 18 கோடி எண்ணிக்கையிலான தங்க நகைகள் முடங்கி உள்ளன. தற்போதுள்ள ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையங்களில் திறன் நாளொன்றுக்கு 2 லட்சம் நகைகள் மட்டுமே. அதனால் கிட்டத்தட்ட அடுத்த 3 வருடங்களுக்கு தேவையான நகைகள் தேக்கமடைந்து, விற்பனைக்கு வர இயலாமல் பின் தங்கியுள்ளன அவர் தெரிவித்தனர்.

 

Tags :

Share via